லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

அரக்கோணம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் அருகே வளர்புரம் அனந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 29), லாரி டிரைவர். இவருக்கு அகிலா குமாரி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் அவ்வப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினத்திற்கு முன் அகிலாகுமாரி பள்ளியாங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story