விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் காயம்
விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் காயம் அடைந்தனர்.
கரூர்
நாமக்கல் பகுதியில் இருந்து சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இரும்பு லோடுகளை ஏற்றுக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரிக்கு பின்னால் அதே சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு முன்பாக சென்று கொண்டிருந்தபோது முன்னாள் இரும்பு லோடுகளை ஏற்றி கொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து அந்த வழியாக சென்ற சிறிய ஓடைக்குள் சென்று நின்றது. இதனால் அந்த லாரியின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தது. இதனால் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story