வாகனம் மோதி லாரி டிரைவர் பலி


வாகனம் மோதி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 3 Aug 2023 1:00 AM IST (Updated: 3 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
விருதுநகர்

தர்மபுரியில் சாலையோரம் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் பலியானார்.

வாகனம் மோதியது

திருச்செங்கோடு அருகே உள்ள அத்திபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவர் குஜராத்தில் இருந்து லாரியில் நூல் ஏற்றிக்கொண்டு சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். தர்மபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியை நிறுத்தி விட்டு அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் லாரி நின்ற இடத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற குமரவேல் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

டிரைவர் சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த குமாரவேலை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது டிரைவர் குமரவேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குமரவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேல் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story