அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
திருச்சி மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று அதிகாலை பெரம்பலூர் அருகே எசனை ரெட்டமலை சந்து பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக ரூ.6,840 மதிப்பிலான உடை கற்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடை கற்களுடன் லாரியையும், அதன் டிரைவர் எசனை தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த ஞானசேகரனையும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
Related Tags :
Next Story