இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த லாரி - 3 பேர் உயிரிழப்பு


இமாச்சல பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த லாரி - 3 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy : ANI

சாலையில் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேராக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி பகுதியில் இன்று அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேராக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூடுதல் எஸ்.பி. ஆசிஸ் சர்மா தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்து சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story