கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது -போக்குவரத்து பாதிப்பு


கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது -போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்- மலப்புரம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சரக்கு லாரி கவிழ்ந்தது

மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் மலப்புரத்துக்கு விற்பனைக்காக புதிய மோட்டார் சைக்கிள்கள் ஏற்றிக் கொண்டு நேற்று காலை 6 மணிக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர்- கேரளா எல்லையான கீழ் நாடுகாணி அருகே தேன்பாறா என்ற இடத்தில் சென்ற போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்தது.

மேலும் லாரியின் முன்பக்க டயர் பஞ்சர் ஆனது. இதைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் சரக்கு லாரி கவிழ்ந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்து டிரைவர்கள் ஓடிவந்து லாரிக்குள் சிக்கி இருந்த டிரைவர் மற்றும் கிளீனரை லேசான காயங்களுடன் பாதுகாப்பாக மீட்டனர். தகவல் அறிந்த வழிகடவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஒரு மணி நேரம்

இந்த சமயத்தில் சரக்கு லாரியில் இருந்து ஆயில் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் கவிழ்ந்து கிடந்த சரக்கு லாரியை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் சாலையோரம் தள்ளி வைத்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை கவனமாக இயக்க வேண்டுமென டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தப்படும். தற்போது சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு ஊட்டிக்கு செல்வதால் மலை பாதையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் வாகன டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story