சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து - 1 லட்சம் முட்டைகள் உடைந்து சேதம்


சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து -  1 லட்சம் முட்டைகள் உடைந்து சேதம்
x

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

செங்கல்பட்டு ,

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரி அச்சரம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வந்த போது சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தால் லாரியில் இருந்த 1 லட்சம் முட்டைகள் உடைந்து வீணாகின.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அச்சரம்பாக்கம் போலீசார் காயம் அடைந்த லாரி டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அச்சரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story