திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது   2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2022 1:00 AM IST (Updated: 16 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்தநிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஆயில் பாரம் ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று மாலை 6 மணியளவில் திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியது. அப்போது லாரி திடீரென பழுதாகி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. கனரக வாகனங்கள் மலைப்பாதையில் அணிவகுத்து நின்றன. அதன்பின்னர் பண்ணாரியிலிருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சரிசெய்து 8 மணியளவில் லாரி புறப்பட்டு சென்றது. அதன்பிறகே மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது.


Next Story