லாரியை திருடியவர் கைது


லாரியை திருடியவர் கைது
x

லாரியை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மணப்பாறை, ஜூலை.12-

மணப்பாறை திருச்சி சாலை பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவர் லாரி வைத்துள்ளார். இந்த லாரியில் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் டிரைவராக இருந்தார். இந்த நிலையில் கணேசன் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் கணேசன் வாங்கிய லாரிக்கு சுரேஷ்குமார் தான் கடனுக்கான உத்தரவாத கடிதம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. கடனை முழுமையாக செலுத்தாத நிலையில் சுரேஷ் குமாருக்கு சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் உடனே கணேசனிடம் கேட்ட போது தன்னை யாரென்றே தெரியாது என்று சொன்னதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் யாருமில்லாத நேரத்தில் கணேசனின் லாரியை திருடிச் சென்றார். இது குறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story