கனிமவளம் ஏற்றிய லாரிகளை நிறுத்தி சோதனை


கனிமவளம் ஏற்றிய லாரிகளை நிறுத்தி சோதனை
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியரை சோதனைச்சாவடியில் கனிமவளம் ஏற்றிய லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி செல்வதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் நேற்று 2-வது நாளாக புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதன்பின்னர் லாரிகள் அனுப்பப்பட்டன.


Next Story