ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 29 March 2023 7:30 PM GMT (Updated: 29 March 2023 7:30 PM GMT)

ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணியில் ஒருங்கிணைந்த கார், வேன், ஆட்டோ டிரைவர்- உரிமையாளர் சங்கத்தை சேர்ந்த 250 பேர் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார்கள். இவர்கள், வெளியூர் ஆட்டோ டிரைவர்கள் வேளாங்கண்ணிக்கு வந்து தங்கி சவாரி ஏற்றிச்செல்வதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வேளாங்கண்ணி ஆர்ச்சில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story