பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது


பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
x

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது

திருப்பூர்

ஊத்துக்குளி

ஊத்துக்குளி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை பறிக்க முயற்சி

ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 32). இவரது மனைவி பிரியங்கா (27). இந்த நிலையில் நேற்று காலை பாண்டித்துரை வீட்டிற்கு வெளியில் உள்ள குளியலைறையில் குளித்துக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் உள்ள ஒரு அறையில் பிரியங்கா தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு 30 வயது மதிக்க ஒரு ஆசாமி அவர்களுடைய வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அந்த ஆசாமி திடீரென்று பாண்டித்துரை குளித்துக்கொண்டிருந்த குளியலறையையை நைசாக வெளிப்புறமாக பூட்டினார். பின்னர் அந்த ஆசாமி வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த பிரியங்காவின் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் பிரியங்கா அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார். உடனே குளித்துக்கொண்டிருந்த பாண்டித்துரை வெளியே வர முயன்றார். ஆனால் குளியலறை வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. ஆனால் பிரியங்காவின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போதுதான் குளியலறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதும், பாண்டித்துரை குளியலறைக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பதும், ஒரு ஆசாமி வீட்டிற்குள் நிற்பதும் தெரியவந்தது. உடனே குளியலறை கதவை திறந்ததும் பாண்டித்துரை வெளியே வந்தார்.

வாலிபர் கைது

பின்னர் அனைவரும் சேர்ந்துஅந்த ஆசாமியை பிடித்து ஊத்துக்குளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை விசாரித்த போது அவர் திருப்பூர் மண்ணரை கருமாராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாறன் என்பவரது மகன் கணேஷ் (33) என்பதும், அவர் மீது அனுப்பர்பாளையம், நல்லூர், மற்றும் திருப்பூர் காவல் நிலையங்களில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story