கெலமங்கலம் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி


கெலமங்கலம் அருகே  பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
x

கெலமங்கலம் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயன்றவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஏ.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயி. இவரது மனைவி வீரம்மா (வயது 45.) நேற்று காலை விவசாய நிலத்திற்கு சின்னசாமி சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது வீரம்மா மாட்டு கொட்டகையில் கத்தியால் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனால் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வீரம்மாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story