கச்சிராயப்பாளையத்தில் காசநோய் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு


கச்சிராயப்பாளையத்தில்  காசநோய் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
x

கச்சிராயப்பாளையத்தில் காசநோய் குறித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுகாதார துறையின் காசநோய் பிரிவு சார்பில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொழிலாளர்களுக்கு நுன் கதிர் பரிசோதனை நடமாடும் வாகனம் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு துணை சுகாதார இயக்குனர் சுதாகர் தலைமை தாங்கினார். சர்க்கரை ஆலைகளின் மேலாண்மை இயக்குனர் முருகேசன், தலைமை பொறியாளர் சக்திவேல், ரசாயன பிரிவு அலுவலர் ஜோதி, அலுவலக மேலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நல அலுவலர் சிங்காரவேல் வரவேற்றார்.

காசநோய் பிரிவு டாக்டர் பொய்யாமொழிகுமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு காச நோய் நடமாடும் வாகனம் மூலம் நுன்கதிர் பரிசோதனை செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் மதியழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காசநோய் பிரிவு இளவரசன், சங்கர், சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், ஆலையின் சிவில் பிரிவு மேற்பார்வையாளர் கரிகாலன், மெக்கானிக்கல் பிரிவு மேற்பார்வையாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story