காசநோய் பரிசோதனை முகாம்
சங்கராபுரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நதியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொதுமக்களுக்கு காச நோய் பரிசோதனை செய்யப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் காசநோய் பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதில் கிராம சுகாதார செவிலியர் சல்மா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ், பரிசோதகர் மகேந்திரன், செவிலியர் ஜூலியா, ஊராட்சி செயலாளர் அன்புச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.