தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம்
x
தினத்தந்தி 4 July 2023 12:45 AM IST (Updated: 4 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது

விருதுநகர்

காரியாபட்டி

காரியாபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாமினை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். முகாமில் டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை நடைபெற்றது. முகாமில் காசநோய் பற்றியும் நோய் பரவும் விதம் மற்றும் குணமாகும் தன்மை பற்றியும் காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் உழவர் பாதுகாப்பு அட்டை இருந்தால் 6 மாத சிகிச்சை காலத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் என்றும், காசநோய் மாத்திரை சரியாக ஆறு மாதம் சாப்பிட்டால் குணமாகும் என்றும், மேலும் காசநோய் துறை சார்பில் மாதம் ரூ.500 வீதம் ஆறு மாதத்திற்கு ரூ.3000 கிடைக்கும் என்று தெளிவாக விளக்கம் கொடுத்தனர். இம்முகாமில் காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், காசநோய் பிரிவு மேற்பார்வையாளர்கள் தங்ககுமார், அக்பர் பாதுஸா, மகாலட்சுமி, மற்றும் செவிலியர்கள், சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story