துலுக்கானத்தம்மன் கோவில் தேர் திருவிழா


துலுக்கானத்தம்மன் கோவில் தேர் திருவிழா
x

கே.வி.குப்பத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தில் துலுக்கானத்தம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் கிராமத்தின் முக்கிய தெருக்களில் சென்றது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

முன்னதாக விழாவையொட்டி கூழ்வார்த்தல், அய்யனார் உற்சவம், கலசம் வைத்து பொங்கல் இடுதல், பூப்பல்லக்கு ஊர்வலம், மஞ்சள் நீராட்டு விழா, நாதஸ்வர இசை, நையாண்டி, கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், வாணவேடிக்கைகள், அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.


Next Story