கொள்ளையனாக மாறி பெண்ணிடம் நகை பறித்த சாத்தூர் போலீஸ்காரர் கைது


கொள்ளையனாக மாறி பெண்ணிடம் நகை பறித்த சாத்தூர் போலீஸ்காரர் கைது
x

மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த சாத்தூர் போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மதுரை

பேரையூர்

மதுரை அருகே பெண்ணிடம் நகை பறித்த சாத்தூர் போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நகை பறிப்பு

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் ராமராஜ். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 60). இவர் வில்லூர் உவரி சாலையில் பெட்டிக்கடை நடந்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் அவரது பெட்டி கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். கடையில் இருந்த முத்துலட்சுமியிடம் தண்ணீர் பாட்டிலும், ஊறுகாயும், வாங்கி சென்றார். பின்பு சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே நபர் வந்து தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்.

முத்துலட்சுமி தண்ணீர் பாட்டில் எடுப்பதற்குள் அந்த நபர் திடீரென முத்துலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து முத்துலட்சுமி, வில்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர்.

போலீஸ்காரர் கைது

இது தொடர்பாக கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர்தான் நகையை பறித்தார் என தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து நகையை மீட்டு அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் ரமேஷ், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தது தெரிய வந்தது.

கடன் பிரச்சினை காரணமாக கொள்ளையனாக மாறி நகை பறித்ததாக போலீஸ்காரர் ரமேஷ் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.


Related Tags :
Next Story