தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளிபிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேசன் பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துளளது.
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று உள்ளனர். பிளஸ்-2 தேர்வில் மாணவி ஹமீதா ரோஸன் 600-க்கு 589 மதிப்பெண்களும், தருணிகா வரலட்சுமி 577 மதிப்பெண்களும், ஹர்ஷினி 567 மதிப்பெண்களும் பெற்று உள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும் பெற்று உள்ளனர். பாடங்களில் 7 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். ஹமீதா ரோஸன் வேதியியல், உயிரியல் பாடத்திலும், கமலி, லோக்ஷனா, அஜய்ராம் ஆகியோர் கணினி அறிவியல் பாடத்திலும், ஹர்ஷினி, தருணிகா வரலட்சுமி ஆகியோர் வணிக கணிதம் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன், பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், சங்க செயலாளர் டி.ராஜகுமார், பொருளாளர் ஏ.செல்வராஜ், துணைத்தலைவர் அனிதா ஆர்.சிவானந்தம், துணை செயலாளர் வி.பி.ராமநாதன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமசுப்பு, ஜனகர், ரமேஷ், பிரம்மசக்தி, ராகவன், லிங்கசெல்வன், ஜெயகணேஷ், ஜெயபாலன் ஆகியோர் பாராட்டினர்.