தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்டு தோறும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 'சமப்படுத்துதல்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் ஜி.சிவக்குமார் தலைமை தாங்கினார். பொது மருத்துவத்துறை தலைவர் மற்றும் ஏ.ஆர்.டி மைய பொறுப்பு அலுவலர் எஸ்.சரவணன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் 'எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று உள்ளோரை அரவணைப்போம், அவர்களுக்கு சம உரிமை அளிப்போம்' என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று குறித்தும், கூட்டு மருத்துவ சிகிச்சை முறை, நோய் தொற்று தடுப்பு குறித்தும் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நுண்ணுயிரியல் துறை தலைவர் ஜெயமுருகன், நெஞ்சக நோய் பிரிவு துறை தலைவர் சங்கமித்ரா, ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர்கள் குழந்தைராஜ், சூர்யா மற்றும் டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.