தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில்முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டுமாணவர்களுக்கு வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டில் 150 புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியது. முன்னதாக, இந்த மாணவ, மாணவிகள் பெற்றோருடன் மருத்துவ கல்லூரிக்கு வந்தனர். அவர்களை சீனியர் மாணவ, மாணவிகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டீன் சிவக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் கலைவாணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் துறை பேராசிரியர்கள், கல்லூரியில் உள்ள வசதிகள், சட்ட திட்டங்கள், விடுதி வசதிகள் குறித்து விளக்கி கூறினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உதவி கண்காணிப்பாளர் குமரன், மாணவர்கள் விடுதி முதுநிலை காப்பாளர் சரவணன், மாணவிகள் விடுதி முதுநிலை காப்பாளர் ஜெயா ஜான்சி, துறை தலைவர்கள் தனலட்சுமி, ரோமி மார்ஷினில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.