தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சர்வதேச யோகா தினம்
தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சார்பில் 9-வது சர்வதேச யோகா தினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பாளர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் வளரிளம் பெண்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் வாழ்வதற்கு தேவையான உணவு முறைகள் மற்றும் யோகா பயிற்சிகள் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்துமதி எடுத்துரைத்தார். செவிலியர் மாணவியருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் செவிலியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.