தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் மாவட்ட எறிபந்து போட்டியில் வெற்றி


தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள்  மாவட்ட எறிபந்து போட்டியில் வெற்றி
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் மாவட்ட எறிபந்து போட்டியில் வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி குறுவட்ட அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி தூத்துக்குடியில் நடந்தது. இந்த போட்டியில் தூத்துக்குடி கமாக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் இசக்கிதுரை ஆகியோரை பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் ராதா ராஜேசுவரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கமாக் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்தனர்.


Next Story