தூத்துக்குடி லாரி அதிபர் கொலை வழக்கில்மேலும் ஒருவர் சிக்கினார்
தூத்துக்குடி லாரி அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் கடந்த 17-ந் தேதி, அந்த பகுதியில் உள்ள லாரி செட்டில் வைத்து வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (வயது 24) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story