தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது


தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது என்று மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கலைஞர் அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் நான் (அமைச்சர் கீதாஜீவன்) சிறப்புரை ஆற்றுகிறேன். இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இதில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர்கழக, சார்பு அணிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story