தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை


தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்:விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Aug 2023 12:15 AM IST (Updated: 24 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மாநாடு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட 9-வது மாநாடு விளாத்திகுளத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில துணைச் செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை மூத்த தலைவர் கணேசன் ஏற்றி வைத்தார். மாநாட்டை மாநில தலைவர் குணசேகரன் தொடங்கி வைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், பாபு, பொருளாளர் சுப்பிரமணி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் லோகநாதன், மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். மாநில செயலாளர் மாசிலாமணி நன்றி கூறினார்.

வறட்சி மாவட்டம்

மாநாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்ட அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தமிழ்நாடு அரசு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், நடப்பாண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் புதிய மாவட்ட தலைவராக கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளராக லெனின் குமார், மாவட்ட பொருளாளராக பிச்சையா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story