தூத்துக்குடியில்மாநில டேக்வாண்டோ போட்டி தொடக்கம்
தூத்துக்குடியில்மாநில டேக்வாண்டோ போட்டியை புதன்கிழமை மேயர் ஜெகன்பெரியசாமி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 23 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகள் 7, 11, 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்க பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story