பெங்களூரில் கனமழை: தூத்துக்குடி ரயில் 3 மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி
மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மழை காரணமாக 3 மணி நேரம் தாமதமாக சென்றடைந்தது.
மதுரை:
தென்மேற்கு ரயில்வேயின் சார்பில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பெங்களூரு மற்றும் மதுரை வழியாக தூத்துக்குடிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மைசூரில் இருந்து மாலை 6.20-க்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதற்கிடையே பெங்களூருவில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று இந்த ரயில் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக மதுரை ரயில் நிலையம் வந்தடைந்தது. அதாவது இன்று காலை 7:35 மணிக்கு வரவேண்டிய இந்த ரயில் காலை 10:35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
பின்னர் காலை 10:55 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்றது. இதனால் இந்த ரயிலில் முன்பதிவு செய்து வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
Related Tags :
Next Story