தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்போலி ரசீது கொடுத்து நிலக்கரி கடத்திய லாரி டிரைவர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்போலி ரசீது கொடுத்து நிலக்கரி கடத்திய லாரி டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பரநகர் 1-வது தெருவை சேரந்தவர் சாகுல் அமீது (வயது 61). தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது நிறுவனத்தின் பெயரில் 2 லாரி டிரைவர்கள் வ.உ.சி. துறைமுகத்தில் போலியாக ரசீது கொடுத்து உள்ளனர். அதன் மூலம் நிலக்கரி லோடு ஏற்றி கடத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாகுல் அமீது, தூத்துக்குடி தெர்மல்நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து 2 டிரைவர்களையும் தேடி வருகிறார்.
Related Tags :
Next Story