தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்சர்வதேச கருத்தரங்கம்


தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்சர்வதேச கருத்தரங்கம்
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் க.சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக இணை பேராசிரியை அமுதா, மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக இணை பேராசிரியை மனோன்மணி முத்துஆறு அண்ணாமலை மற்றும் மலேசியாவை சேர்ந்த 41 மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகளையும் சமர்ப்பித்தனர்.

இதனை தொடர்ந்து கல்லூரி பொன்விழா ஆண்டின் இலட்சினை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம் வரவேற்று பேசினார். மலேசியா சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழக இணை பேராசிரியை இலட்சினையை வெளியிட கல்லூரி செயலாளர் சொ.சுப்புலட்சுமி பெற்றுக் கொண்டார். விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியை மல்லிகா நன்றி கூறினார்.


Next Story