தூத்துக்குடி ஆயுதப்படையில் குழந்தைகள் நல காப்பகம்
தூத்துக்குடி ஆயுதப்படையில் குழந்தைகள் நல காப்பகத்தை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை போலீசார் தங்களது குழந்தைகளை பகல் நேரங்களில் பார்த்து கொள்வதற்காக குழந்தைகள் நல காப்பகம் அமைத்து தர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணனிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அதன்பேரில் ஆயுதப்படை போலீசார் நலன் கருதி 3-வது மைல் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் போலீசார் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேச மணிகண்டன், ஈசுவர மூர்த்தி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story