தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு, மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மதுரை,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு, மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு மீதான விசாரணை, மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் 1ம் தேதியன்று, அவ்வழக்கு விசாரணைக்காக வந்தது.வழக்கு பதிவு செய்யப்பட்ட 101 பேரில் 27 நபர்கள் ஏற்கனவே ஆஜராகி இருந்ததால், மீதமுள்ள 74 பேர் அன்றைய தினம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 64 பேர் மட்டுமே அன்று ஆஜராகினர்.
இதனைத்தொடர்ந்து வழக்கில் இன்னும் பத்து நபர்கள் ஜூன் 6-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறி தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை (இன்று) ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story