அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய இருவர் கைது
அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது கரூர் தெரசா கார்னர் பகுதியில் சென்றபோது கரூர் ராமனூரை சேர்ந்த பிரபு, புதுக்கோட்டையை சேர்ந்த பாக்கியராஜ் இருவரும் மோட்டார்சைக்கிளில் பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர். இதனால் பஸ்சின் கண்டக்டர் அவர்களிடம் ஏன் வழிவிடாமல் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது பிரபு, பாக்கியராஜ் இருவரும் பஸ்சுக்கு முன்னாள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, பஸ்சின் டிரைவர், கண்டக்டர், பயணி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பாக்கியராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story