2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

தஞ்சை அருகே வல்லத்தில் வீட்டின் கதவை உடைத்து டி.வி., கம்ப்யூட்டரை திருடி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

வல்லம்;

தஞ்சை அருகே வல்லத்தில் வீட்டின் கதவை உடைத்து டி.வி., கம்ப்யூட்டரை திருடி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோழிப்பண்ணை உரிமையாளர்

தஞ்சை அருகே உள்ள வல்லம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30). இவர் வல்லம் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை ராம்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலை ராம்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

திருட்டு

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவா் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டிவி, கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராம்குமார் வல்லம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துவசாரணை மேற்கொண்டனர். நேற்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வல்லம் எம்.ஜி.ஆர். நகருக்கு போலீசார் சென்றனர்.

கைது

அங்கு ராம்குமார் வீட்டில் திருடிய 2 சிறுவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 30) என்பவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபர்களிடம் இருந்து ராம்குமார் வீட்டில் இருந்து திருடப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை போலீசார் கைப்பற்றினார். இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர்.


Next Story