மோட்டார் சைக்கிள்கள் மோதல் வாலிபர் உள்பட 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல் வாலிபர் உள்பட 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தை சேர்ந்தவர் உத்தரவேல்(வயது 45). இவர் நேற்று முன்தினம் எலவனாசூர்கோட்டையில் இருந்து தனது உறவினர் மகன் தருண்(12) என்கிற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். நொனையவாடி அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் உத்தரவேல் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்தரவேல் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பூ மலையனூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வீரமணி(30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த தருண், வீரமணியின் மனைவி சுப்புலட்சுமி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.