முதியவர் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து பலி


முதியவர் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து பலி
x

அணைக்கட்டு அருகே முதியவர் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர்

அணைக்கட்டு அருகே முதியவர் உள்பட 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மயங்கி விழுந்து 2 பேர் பலி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 47), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர், உறவினர்கள் தேடிப்பார்த்தனர். இதற்கிடையே தார்வழி கொல்லைமேடு அருகே விவசாய நிலத்தில் உள்ள மரத்தடியில் சுதாகர் மயங்கி கிடப்பது தெரிய வந்தது. அதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுதாகரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதேபோன்று அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் ராமைய்யா (70). இவர் நேற்று முன்தினம் மாலை தார்வழி பஸ்நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் உடலையும் பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவு

இதற்கிடையே மயங்கி விழுந்து உயிரிழந்த சுதாகர், ராமைய்யா ஆகியோர் சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்ததாக தகவல் பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், ஆந்திர மாநிலம் நகரிபுத்தூர் பகுதியை சேர்ந்த கூடைபின்னும் தொழிலாளியான ராமைய்யா உடல் நலக்குறைவிற்கு சிகிச்சை பெற அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் தார்வழி பஸ்நிறுத்தம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். திருமணம் ஆகாத சுதாகரும் வெயில் தாக்கம் காரணமாக சுருண்டு மயங்கி விழுந்து இறந்துள்ளார். 2 பேரின் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர்கள் 2 பேரும் சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story