வௌ்ளகோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வௌ்ளகோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
x

வௌ்ளகோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

வெள்ளகோவில்

வௌ்ளகோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

வெள்ளகோவில் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவர் கடந்த 17-ந் தேதி காலை 11 மணிக்கு வெள்ளகோவில்-கோவை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் போட்டு அந்த பையை ஸ்கூட்டர் இருக்கை அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் ஸ்கூட்டரில் அங்கிருந்து வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தார். அங்கு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்று விட்டு திரும்பி பார்த்தபோது பணத்தை காணவில்லை.

இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வெள்ளகோவில் போலீசார் கரூர் மாவட்ட எல்லையான குருக்கத்தி சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

2 பேர் கைது

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் சங்குப்பேட்டை கம்பன் தெருவை சேர்ந்த ராஜ்குமார்(வயது 25), வேப்பந்தட்டை அரும்பாவூர் இளங்கோ தெருவை சேர்ந்த செந்தில்குமார் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் ராமலிங்கம் ஸ்கூட்டரில் இருந்து ரூ.1 லட்சத்தை திருடியதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

----

Next Story