கழுகுமலையில் இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது


கழுகுமலையில் இருதரப்பினர் மோதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை பாலசுப்பிரமணியம் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி ஆனந்தவள்ளி(வயது 60) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஆனந்தவள்ளி அப்பகுதியில் உள்ள தெருவில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் தங்கவேல் மகன் முருகன் மதுகுடித்துவிட்டு அப்பகுதியில் உள்ளவர்களை அவதூறாக பேசியுள்ளார். தொடர்ந்து ஆனந்தவள்ளியிடம் அவர் தகராறு செய்துள்ளார். இதை கண்டித்த ஆனந்தவள்ளியை முருகன் சரமாரியாக தாக்கினார். இதில் ஆனந்தவள்ளி காயமடைந்தார். இதை அறிந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் முருகனையும், அவரது தாயார் சரோஜாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து முருகன், ஆனந்தவள்ளி மகன் மாடசாமி (29), அவரது உறவினர்களான தூத்துக்குடி கணேசபுரம் சண்முகம் மகன் ரவி (43), தூத்துக்குடி ராமதாஸ் நகர் ராஜேந்திரன் மகன் காளீஸ்வரன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தார்.


Next Story