தர்மபுரியில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்வு
தர்மபுரி
தர்மபுரி:
தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேக தட்டச்சு தேர்வு தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்த தேர்வில் 647 பேர் பங்கேற்றனர். இரண்டாவது நாளான நேற்று நடந்த தேர்வில் 760 பேர் பங்கேற்றனர். மொத்தம் 1,407 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்றுள்ளனர். தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கிள்ளிவளவன், அரசு பாலிடெக்னிக் முதல்வர் லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் அரசு கலைக்கல்லுாரி உதவி பேராசிரியர்கள் மேற்பார்வையில் இந்த தட்டச்சு தேர்வு நடந்தது.
Next Story