தட்டச்சு தேர்வில் 1,352 பேர் பங்கேற்பு


தட்டச்சு தேர்வில் 1,352 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தட்டச்சு தேர்வில் 1,352 பேர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஓசூர் அதிமான் பொறியியல் கல்லூரியில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேக தேர்வு ஆகிய பாடங்களில் தட்டச்சு தேர்வுகள் 2 நாட்கள் நடந்தன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சு பள்ளிகளின் சார்பில், தட்டச்சு தேர்வில் 1,352 பேர் பங்கேற்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் 982 பேரும், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மையத்தில் 370 பேரும் தேர்வு எழுதினர். இத்தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் சுப்பையா மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் ராபார்ட்கிளைவ், சுவாமிதாஸ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்தது. தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் இருந்து பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story