உடன்குடியில் பெருமாள்சுவாமி கோவில் திருவிழா


உடன்குடியில்  பெருமாள்சுவாமி   கோவில் திருவிழா
x

உடன்குடியில் பெருமாள்சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பெருமாள்புரம் பெருமாள்சுவாமி கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது, முதல் நாள் மாலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையும் நடந்தது. பின்பு யாகசாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. 2-ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நண்பகல் 2 மணி அளவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story