உடன்குடி புதுமனை கந்தூரி விழா
உடன்குடி புதுமனை கந்தூரி விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடியில் புதுமனை மஹான் முஹியித்தீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 204-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவில் பால்குடம் எடுத்தல், 2-ம் நாள் கொடி சுற்று வரி வசூல், அரபி மதரஸா நிகழ்ச்சிகள், இஸ்லாமிய இன்னிசை நடந்தது. நேற்று வரி நேர்ச்சை வழங்குதல், மவுலுது ஷரீப் நடைபெற்றது. இரவில் துவா ஓதப்பட்டது. அரபி மதரஸா மாணவர்களின் பயான் நிகழ்ச்சிக்கு கந்தூரி கமிட்டி கவுரவ தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். பள்ளிவாசல் இமாம் முகம்மது சபீக், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்பு பயான் வழங்கினர். தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உடன்குடி பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி, கமிட்டி ஆலோசகர் ரஹ்மான் ஆகியோர் பரிசு வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக உடன்குடி அனைத்து சுன்னத் ஜமாஅத் தலைவர் மகபூப் அலி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டி தலைவர் யூனூஸ் மீரான், செயலர் கிதிர் மீராச மற்றும் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.