உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டம்


உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டம்
x

சோளிங்கர் மத்திய, கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டப்பட்டது.

ராணிப்பேட்டை

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் நேற்று காலை 8.30 மணிக்கு பாணாவரம் கூட்ரோட்டில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.எம்.நாகராஜு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் எஸ்.என். உதயகுமார், துணைச் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு பொதுமக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் கூடலூரில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் வினோத் காந்தி கலந்துகொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.


Related Tags :
Next Story