உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா


உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா
x

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழாவையொட்டி, அமைச்சர் காந்தி நோட்டு புத்தகம் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையத்தில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் பூங்காவனம் வரவேற்புரை ஆற்றினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் சுமார் 1,000 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட 10 கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமுர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் சிவானந்தம், குமுதா, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, மாநில சுற்றுச்சூழல் அணி துணைசெயலாளர் ஆர்.வினோத் காந்தி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம், ஜி.கே.குழுமத்தின் இயக்குனர் சந்தோஷ் காந்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷாவெங்கட், வியட்நாம் அயலக அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் அணி சார்பில், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமையில் சுமார் 45,000 பழச்செடிகள் மற்றும் விதைகள் வழங்கும் தொடக்க விழாவை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்து, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை ஆகிய நகரங்களுக்கும், அம்மூர் பேரூராட்சி பகுதிகளுக்கும் செடி மற்றும் விதைகளை வழங்கினார்.


Related Tags :
Next Story