உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
சேரன்மாதேவியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா நடந்தது. விழாவுக்கு, நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார்.
சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரேம் ஆனந்த், நகர இளைஞரணி ராமச்சந்திரன், கவுன்சிலர் அன்வர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு வீரவநல்லூர் ஊராட்சி செங்குளம் கிராமத்தில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் ஆசைதம்பி, நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.