உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
பாவூர்சத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி சீனித்துரை தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் லட்டு வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் வளன்ராஜா, ராஜேஸ்வரி, பஞ்சாயத்து தலைவி முத்துமாலையம்மாள், யூனியன் முன்னாள் துணைத் தலைவர் மதிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி உள்பட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story