கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி 309 மாணவிகளுக்கு 'லேப்டாப்' உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி 309 மாணவிகளுக்கு லேப்டாப் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

சென்னையில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி 309 மாணவிகளுக்கு ‘லேப்டாப்’ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'வேருக்கு விழா' என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், துறைமுகம் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், 271 பெண்களுக்கு தையல் எந்திரங்களையும், 309 மாணவிகளுக்கு லேப்டாப்களையும், 450 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.

மேலும், சமீபத்தில் காலமான தி.மு.க.வினர் 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், "சென்னை (கிழக்கு) மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் 'கருணாநிதி 99-வேருக்கு விழா' நிகழ்வில் இன்று (நேற்று) துறைமுகத்தில் 271 மகளிருக்கு தையல் எந்திரம், 309 மாணவிகளுக்கு லேப்டாப், 450 பேருக்கு கல்வி உதவித்தொகை, மறைந்த கழகத்தினர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கினோம்" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story