உதயசூரியன் எம்.எல்.ஏ. இல்ல திருமணம்


உதயசூரியன் எம்.எல்.ஏ. இல்ல திருமணம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே இன்று நடைபெறும் உதயசூரியன் எம்.எல்.ஏ. இல்ல திருமணத்தை உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியனின் மகன் டாக்டர் உ.பர்னாலாவுக்கும், வேலூர் மாவட்டம் கணியம்பாடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்-விஜயமாலா தம்பதியரின் மகளும், டாக்டருமான ஆர்.சங்கவிக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள கலைஞர் திடலில் திருமணம் நடைபெற உள்ளது. விழாவுக்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தலைமை தாங்குகிறார்.

மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்

விழாவில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞரணி தி.மு.க. செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட அவை தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் கம்பன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான், வெள்ளகோவில் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், செந்தில்பாலாஜி, கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. சில நிர்வாகிகள், கழக முன்னோடிகளுக்கு கால நேரம் காரணமாக அழைப்பிதழ் வைக்க முடியவில்லை. ஆகவே இதனையே எனது அழைப்பாக ஏற்று கட்சி நிர்வாகிகள் எனது மகனின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும்.

இவ்வாறு உதயசூரியன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கார வளைவுகள்

மேலும் இந்த திருமணவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால் அவர்கள் அமர்வதற்கும், உணவு சாப்பிடும் வகையிலும் பந்தல் மற்றும் மணமேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று திருமணம் நடைபெறும் இடம் மற்றும் முக்கிய சாலைகளில் அலங்கார வளைவுகள், வழியெங்கும் 50 அடி உயர கொடிக்கம்பங்கள், கட்சி தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story