அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்...!
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும், முதல்-அமைச்சரின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் தற்போது இடமளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பேரவை கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்-அமைச்சர் குடும்பத்தினர் பங்கேற்றனர்.