கேரள விவசாயிகளுக்கு பயிற்சி


கேரள விவசாயிகளுக்கு பயிற்சி
x
திருப்பூர்

உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திநகரில், மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தின் செயல்விளக்கம் மற்றும் உற்பத்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணைக்கு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச்சேர்ந்த 19 விவசாயிகள், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ்வெளி மாநிலங்களுக்கு கண்டுணர் சுற்றுலாவாக வந்திருந்தனர். அந்த விவசாயிகளுக்கு தென்னை வளர்ச்சி வாரிய தளி பண்ணை மேலாளர் கு.ரகோத்துமன், அறிவியல் ரீதியான தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது தென்னைக்கு நடவு குழி எடுத்தல், நாற்றுக்கள் நடுதல், உரங்கள் இடுதல், நாற்றுக்கள் பராமரிப்பு, தரமான தென்னை நாற்றுக்களை தேர்வு செய்தல், பூச்சிமற்றும் நோய்கள் மேலாண்மை உள்ளிட்ட தென்னை சாகுபடி குறித்த விபரங்களை செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இதற்கான கண்டுணர் சுற்றுலா ஏற்பாடுகளை கேரள அரசின் வேளாண் துறை அதிகாரிகள் ஜெய்சி மோல்,சிமோனி ஜோஸ்,பைசல், பிஜு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story